Friday, December 18, 2020

தமிழக இளைஞர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வின் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக கூறப்படும் காரணங்கள் & விளக்கங்கள்|GreaThings

 

நாளை(19-12-2020) SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

தமிழக இளைஞர்கள் பெரிய அளவில் இதற்கு விண்ணப்பிக்க முன் வர வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட சமீபத்தில் வெளியிடபட்ட .நா...தே தேர்வு அட்டவணையின் படி குரூப்-2 & குரூப் - 4 தேர்வுகள் நடத்த இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ளது (தேர்தலினால் இன்னும் தள்ளி போக வாய்ப்புள்ளது). எனவே இத்தேர்வினை கிடைக்கின்ற வாய்ப்பாக தமிழக இளைஞர்கள் கருத வேண்டும்.

தமிழக இளைஞர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வின் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக கூறப்படும் காரணங்கள் & விளக்கங்கள்


 

1. தேர்வு கட்டணம்.

UPSC, SSC போன்ற தேர்வாணையம் நடத்துகிற பல தேர்வகளின் கட்டணம் ₹100-150 வரை தான் (சில தனிபட்ட தேர்வானையம் அல்லது தேர்வுக்கு மட்டும் தான் மிக அதிகமாக இருக்கும்).

2. தேர்வு பாடத்திட்டம்.

இந்தியாவில் அனைத்து பணியாளர் தேர்வுகளிலும் கிட்டதட்ட ஒரே தேர்வு பாடத்திட்டம் தான். பதவிகள், பணிகளை பொறுத்து பாடத்திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் உள்ளது. அனைத்து தேர்வுகளிலும் பொது அறிவு, Reasoning, Aptitude உள்ளது. மத்திய அரசு தேர்வுகளில் ஆங்கில தேர்ச்சி கட்டாயம். இது மட்டும் தான் தமிழக தேர்வுக்கும் மத்திய அரசு தேர்வுக்கும் உள்ள பாடத்திட்டத்தில் உள்ள வித்தியாசம். ஆங்கில தேர்வு எல்லாவற்றிலும் கடினமாக இருக்காது குறிப்பாக CHSL தேர்வில் எளிய முறையில் கேள்விகள் அமையும்.

3. தேர்வு தேதிகள், இடம், நேரம்.

மத்திய அரசு தேர்வுகள் பெரும்பாலும் வார நாட்களிலும் நடத்தப்படுகிறது (தமிழக அரசு வார விடுமுறையில் மட்டும் நடத்துகிறது).தேர்வு இடங்கள் பெரும்பாலும் நகர்புறங்களை ஒட்டி அமைக்கப்படுகிறது.

இதற்கு காரணம் தேர்வு கணினி வழியில் நடத்தப்படுவதாலும், தனியார் அமைப்பின் மூலம் நடத்தப்படுகிறது. தமிழக தேர்வுகளும் வருங்காலத்தில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்ற வாய்ப்புள்ளதால் இதை நாம் காரணமாக கூறி தேர்வை புறம் தள்ளக்கூடாது.

 

4. தேர்வுக்கு முந்தைய/ பிந்தைய நடைமுறை

தமிழக இளைஞர்களுக்கே மத்திய அரசின் தேர்வுக்கு முந்தைய பிந்தைய நடைமுறை களை அறிந்து கொள்வதில் பல சிக்கல்கள் முன்னர் இருந்தது. ஆனால் இப்போது பல யூடியூப் சேனல்கள், வலைதளங்கள், சமூக ஊடகங்கள் வழியே செய்திகள் உடனுக்குடன் பகிரப்படுகிறது. மேலும் தேர்வாணையைங்கள் தங்கள் வலைதளங்களிலும், இமெயில் மூலமாகவும் செய்திகளை பகிரகின்றன.

5. தேர்வு முறை.

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளிலும் 2 or 3 கட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. (தமிழகத்தில் குரூப் 4 ஓரே தேர்வு நேரடி பணி நியமனம்) மேலும் தேர்வு நேரம் குறைவு, நெக்டிவ் மார்க்கிங், கணினி வழி தேர்வு போன்றவை இதில் உள்ள சிக்கல்களாகும்.

கணினி வழி தேர்வு காலத்தின் கட்டாயம். மேலும் தமிழக தேர்வுகளும் வருங்காலத்தில் கணினி வழியிலேயே நடத்தப்படும். மேலும் மேற்கண்ட நடைமுறைகள் வருங்காலத்தில் அனைத்து தேர்வுகளிலும் பின்பற்ற வாய்ப்புள்ளது.

எனவே இத்தகைய காரணங்களை புறந்தள்ளி அனைத்து வகையான தேர்வுகளிலும் பங்கு பெற்று வெற்றி பெறுவோம்.